Offline
ஓ.டி.டி.யில் வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் ‘சாவா’ படம்
By Administrator
Published on 04/11/2025 09:06
Entertainment

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். விக்கி கவுசல் சம்பாஜி மகாராஜாவாக, ராஷ்மிகா மந்தனா மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகி, ரூ.800 கோடியின் வசூல் செய்துள்ளது. தற்போது, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments