சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ரெட்ரோ. இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது.மே 1 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில படங்கள் சூர்யாவிற்கு எதிர்பார்த்தவாறு போகவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இது சூர்யா ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும் ரெட்ரோ மூலம் கண்டிப்பாக சூர்யா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரெட்ரோ படத்தை தொடர்ந்து ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா.