Offline
இயக்குனராக இல்லை…சினிமாவில் நடிகராக அறிமுகமான ‘விஸ்வம்பரா’ இயக்குனர்- எந்த படத்தில் தெரியுமா?
By Administrator
Published on 04/17/2025 07:00
Entertainment

சென்னை,நந்தமுரி கல்யாண் ராமின் ‘பிம்பிசாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசிஷ்டா மல்லிடி. இவர் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விஸ்வம்பராவை இயக்கி வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ராமராமா’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், வசிஷ்டா மல்லிடி சினிமாவில் இயக்குனராவதற்கு முன்பு நடிகராக அடியெடுத்து வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், ‘விஸ்வம்பரா’ இயக்குனர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி  நடித்திருக்கிறார்.கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த பாடலாசிரியர் குலசேகரின் இயக்கத்தில் வெளியான ‘பிரேமலேகா ராசா’ படம்தான் அது. ஆனால், இப்படம் திரையரங்குகளுக்கு வரவில்லை.

Comments