Offline
சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
By Administrator
Published on 04/21/2025 07:00
Entertainment

வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‛மதராஸி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி’ நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்துள்ளார். அதாவது, ஸ்ரேயர் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்துள்ளார். 3 மாதங்களுக்கு அவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

Comments