நடிகை ரம்பா என்றதுமே ரசிகர்கள் மனதில் நிறைய விஷயங்கள் முதலில் நியாபகம் வரும்.
முதலில் பார்த்திபன், சார் ரம்பா சார் என சொல்வது, அழகிய லைலா பாடல் என அவரை நினைக்கும் போது முதலில் நியாபகம் வரும் விஷயங்கள் நிறைய உள்ளது.ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.இவர் கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார்.சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.சமீபத்திய பேட்டியில், 15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுவரும் வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன் என கூறியுள்ளார்.