Offline
முன்னேறுங்கள்.. உங்களை நான் இந்திய ஜெர்ஸியில் பார்க்க வேண்டும்: ஐபிஎல் வீரருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து..!
By Administrator
Published on 04/22/2025 16:43
Entertainment

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழக வீரருக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 198 ரன்கள் குவித்தது. இந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்த போட்டியில் சூப்பராக பேட்டிங் செய்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "நீங்கள் விளையாடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்கள் திறமையால் நீங்கள் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பீர்கள். இந்திய அணியின் ஜெர்சியில் உங்களை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அவர் பதிவு செய்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த ஒரு ஐபிஎல் வீரருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஊக்கம் அளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

Comments