ஏமன் தலைநகர் சனாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.ஏமன் அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சனாவின் ஷூப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புற சந்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லபட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தாக்கி குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.