Offline
Menu
சரவாக் லிம்பாங்கில் கார் கவிழ்ந்து விபத்து: இளைஞர் பலி மற்றும் ஒருவர் காயம்
By Administrator
Published on 02/19/2026 17:00
News

சரவாக் மாநிலத்தின் லிம்பாங், கம்பங் பகோல் (Kampung Bakol) பகுதியில் நேற்று மாலை 5:42 மணியளவில் ஒரு புரோட்டான் சாகா (Proton Saga) காரும், ஹோண்டா வேவ் (Honda Wave) மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரைச் ஓட்டிச் சென்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரானது மோதிய வேகத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், அந்த இளைஞர் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். 

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி பலத்த காயமடைந்து அரை மயக்க நிலையில் மீட்கப்பட்டார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காருக்குள் சிக்கியிருந்த இளைஞரின் உடலை மீட்டனர். காயமடைந்த பெண் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

சம்பவம் நடந்த இடம் லிம்பாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது. உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments