உத்தர பிரதேசம் கோரக்பூரில், வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை அவரது மனைவி ரஜியா, கள்ளக்காதலன் ரூமான் மற்றும் நண்பர் ஹிமான்ஷு உதவியுடன் கொலை செய்துள்ளார். நவுஷாத் அகமது என்ற அவரை இரவில் கொலை செய்து, உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து 55 கி.மீ. தொலைவில் விவசாய நிலத்தில் வீசியுள்ளனர். விவசாயி ஒருவர் சூட்கேஸை கண்டதால் இது போலீசாருக்கு தெரிந்தது. விசாரணையில் மனைவி குற்றம் ஒப்புக்கொண்டார். இது மீண்டும் நாட்டை உலுக்கிய கொடூர சம்பவமாகியுள்ளது.