Offline
Chat GPT-ல் இனி ‘ப்ளீஸ்’, ‘தேங்க் யூ’ சொல்லாதீங்க’- ஓபன் ஏஐ தலைவர்
By Administrator
Published on 04/22/2025 16:57
News

ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.

ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது.இதனால் சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.இந்நிலையில், நாம் சாட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments