கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரையான ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்தில், தாய்லாந்தில் இருந்து மொத்தம் 6,172 வாகனங்கள் கிளந்தானில் உள்ள மூன்று முக்கிய எல்லை சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்தன என்று, கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) இயக்குநர் முகமட் மிசுவாரி அப்துல்லா தெரிவித்தார்.
அதேநேரம் இதே காலகட்டத்தில், மொத்தம் 5,506 வாகனங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் “JPJ இன் முதன்மை நடவடிக்கையான Ops HRA (ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி) 2025 இன் கீழ் விதிக்கப்பட்ட 77 சம்மன்கள் மூலம் RM76,950 வருவாயை ஈட்டியது,” என்று அவர் கூறினார்.