தேசிய சேவை பயிற்சி திட்டத்தின் (PLKN) 2 ஆவது தொடர் 2/2025 வரும் மே 11 முதல் ஜூன் 24 வரை இரண்டு இடங்களில் தொடங்குகிறது.
முதலாவது கோலாலம்பூரில் உள்ள 515வது பிராந்திய இராணுவ படைப்பிரிவு முகாமிலும், பகாங்கின் பெக்கானில் உள்ள 505வது பிராந்திய இராணுவ படைப்பிரிவு முகாமிலும் இந்தப் பயிற்சி நடைபெறும்.
45 நாள் பயிற்சி அமர்வுக்கான விவரங்களை இன்று முதல் https://jlkn.mod.gov.my/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் சரிபார்க்கலாம் என்று தேசிய சேவை பயிற்சித் துறை நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
தேசிய சேவை பயிற்சித் துறையின்படி, 70 விழுக்காடு அடிப்படை இராணுவப் பயிற்சி மற்றும் 30 விழுக்காடு தேசத்தைக் கட்டியெழுப்பும் கூறுகளைக் கொண்ட உடல், மன மற்றும் குடிமை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் பயிற்சியாகும். இதற்கு 550 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.