கோலாலம்பூர் — பரஸ்பர நன்மைக்காக பழிவாங்கும் வரிகள் தொடர்பாக சிறந்த தீர்வைக் காண முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (மிட்டி) உறுதிபூண்டுள்ளது என்று தற்போது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அதன் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
“அமெரிக்காவின் மூத்த அரசாங்க அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பு, நான் இங்கு மிட்டி குழுவுடன் கலந்துரையாடினேன். மலேசியா-அமெரிக்க வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் சமீபத்திய முயற்சிகளை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்,” என்று அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
“எங்கள் பகிரப்பட்ட நலன்களுக்கான சிறந்த தீர்வைக் கண்டறிய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அவர் அமெரிக்க தலைநகருக்கு இரண்டு நாள் விஜயத்தின் போது மேலும் கூறினார்.
அமைச்சர் ஏப்ரல் 24 அன்று வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார்.