Offline
நயன்தாராவுடன் மோதலா? – சுந்தர்.சி விளக்கம்
By Administrator
Published on 04/26/2025 13:49
Entertainment

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம், கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சுந்தர்.சி – நயன்தாரா இடையே திடீர் மோதல் வெடித்திருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பரபரப்பு தகவல் வெளியானது.இதனை சுந்தர்.சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்கும், நயன்தாராவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எதனால் இப்படிப்பட்ட தகவல் பரவியது என்பதே புரியவில்லை. நயன்தாரா ரொம்ப ‘ஸ்டிரிக்ட்’ ஆன நடிகை. படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் ஓய்வு கிடைத்தால் கூட, கேரவனுக்கு செல்லமாட்டார். எங்களுடனேயே படப்பிடிப்பில் அமர்ந்திருப்பார். இந்த மாதிரி வெளியாகும் எல்லா கிசுகிசுக்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது” என்று கூறினார்.

Comments