Offline
கே.எல்.கோபுரம் நாளை பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படும்
By Administrator
Published on 04/26/2025 13:52
News

கே.எல்.கோபுரம் நாளை காலை 9 மணிக்குப் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படும் என்று தொடர்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மக்களுக்குச் சிறந்த வகையில் சேவைகளை வழங்குவதில் கே.எல்.கோபுரம் சிறந்தவற்றை வழங்குவதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. கே.எல்.கோபுரத்தை LSH SERVICE MASTER SDN BHD நிறுவனம் நிர்வகித்து வருகிறது.முன்னதாக, புதுபிப்பு, மேம்பாட்டு நடவடிக்கைக்காக கே.எல்.கோபுரம் பொதுமக்களுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அரசாங்கம் அறிவித்திருந்தது.கே.எல்.கோபுரம் மேம்படுத்தும், சீரமைக்கும் நடவடிக்கைக்காக LSHSM நிறுவனத்தோடு 20 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments