பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் மற்றும் அவரது தாயார் 11 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது- போலீஸ்
கோலாலம்பூர்:
மலேசியாவின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன், இன்று செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.
தாயும் மகனும் குறித்த குடியிருப்புக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று, செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது என்றும், இதுவரை, இந்த வழக்கில் எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் உயிரிழந்த இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.