சூர்யாவின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ரெட்ரோ. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் புக்கிங் பற்றியும் இப்படத்தின் வசூல் கணிப்பு பற்றியுமான ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு நேற்று துவங்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி ரெட்ரோ படத்தின் முன்பதிவு அமோகமாக இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. புக்கிங் ஓபனாக சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. என்னதான் கடைசியாக வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் ரெட்ரோ படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கின்றது. சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களும் இப்படத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா ,ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இப்படத்தின் முன்பதிவு சிறப்பாக இருக்கின்றதாம்.மேலும் படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை