மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தில் கமலுடன் இணைந்து முக்கியமான ரோலில் நடித்துள்ளார் சிம்பு. இதனையடுத்து பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சிம்பு நடிப்பில் அடுத்ததாக 'தக் லைஃப்' ரிலீசாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்தப்படங்களின் பணிகள் அடுத்தடுத்து துவங்கவுள்ளன. இந்நிலையில் சிம்புவுடன் இணைந்து நடிப்பது குறித்து பிரபல இளம் நடிகர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு பங்கேற்றார். அப்போது அவருடன் ஹரிஸ் கல்யாணும் மேடையில் இருந்தார். அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், 'சிம்பு - ஹரிஸ் கல்யாண் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதா? அதுவும் அண்ணன் தம்பியாக நடிப்பீர்களா? என கேட்டனர். இதற்கு பதிலளித்த சிம்பு, அப்படி ஒரு நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்பேன் என தெரிவித்தார்.