Offline
பத்மபூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித் குமார்.. எழுந்து நின்று கைதட்டி கொண்டாடிய குடும்பத்தினர்
By Administrator
Published on 04/29/2025 08:00
Entertainment

சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.. இதற்காக அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தோடு டெல்லிக்கு சென்றிருந்தார்.. ஏர்போர்ட்டில் அவர் குடும்பத்தோடு செல்லும் போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்மபூஷன் விருதை பொருத்தவரை கலை துறையில் நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது வழங்கப்பட இருப்பதற்காக அறிவித்ததும் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

அஜித் வெளியிட்ட அறிக்கை தனக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுவதை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து இந்த மதிப்புக்குரிய பத்மபூஷன் விருதை பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்திய மதிப்பிற்குரிய மரியாதையை வழங்கிய பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறி இருந்தார். 

மனைவிக்கு நன்றி அதோடு இந்த தருணத்தில் தன்னுடைய தந்தையும் இருந்திருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். சிறுவயதிலிருந்தே தன் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து பல தியாகங்களை செய்த எனது தாய்க்கு நன்றி, அதோடு 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கு நன்றி என்று அஜித் குறிப்பிட்டு இருந்தார்.

Comments