Offline
Menu

LATEST NEWS

புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது
By Administrator
Published on 05/02/2025 13:54
News

2024-ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.பல்வேறு குற்றங்களுக்காக 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 350 ரிங்கிட் மதிப்பிலான அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டாக்டர் சுல்ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.விளையாட்டுப் பொருள்கள் அல்லது உணவைப் போன்று புகைப்பிடிக்கும் பொருட்களை பொட்டலமிட்டது தொடர்பாக 46 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.புகைப்பிடிக்கும் பொருள்களை இணையம் வழி மேற்கொள்ளப்படும் விற்பனையைத் தடைசெய்யும் விற்பனைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் 20 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.சமூகத்தில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக டாக்டர் சுல்ஹிசாம் விவரித்தார்.

Comments