கோத்தா டிங்கி: வியாழக்கிழமை (மே 1) இரவு 8.15 மணிக்கு செனாய் – டேசாரு விரைவுச்சாலையில் KM50.2 இல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்- ஒரு கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோத்தா திங்கி OCPD கண்காணிப்பாளர் யூசோப் ஓத்மான் கூறுகையில், 28 வயதான பாதிக்கப்பட்டவர் 21 வயது உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறினார்.உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிள்களை முந்திச் செல்ல முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து விரைவுச்சாலையின் எதிர் திசையில் சறுக்கி விழுந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 46 வயது உள்ளூர் ஓட்டுநரால் காரைக் கட்டுபடுத்த போதுமான நேரமின்மை காரணமாக 28 வயது உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற பைக்கில் மோதியதாக துணை அதிகாரி யூசோப் கூறினார்.பாதிக்கப்பட்டவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தா டிங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பியதாகவும், இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கண்காணிப்பாளர் யூசோப் தெரிவித்தார்.