ஹாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ கதைச் சுருக்கம் (Synopsis) இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டாம் ஹாலண்ட் (Tom Holland) மீண்டும் ஸ்பைடர் மேனாக நடிக்கும் இந்தப் படம், 'நோ வே ஹோம்' (No Way Home) படத்தின் நிகழ்வுகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒருவன் இருந்ததையே உலகம் மறந்துவிட்ட நிலையில், ஸ்பைடர் மேன் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு நியூயார்க் நகரைப் பாதுகாக்கும் ஒரு தனிமையான ஹீரோவாகச் செயல்படுவதாகக் கதை நீள்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று வெளியான இந்தக் கதைச் சுருக்கம் மார்வெல் (MCU) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.