Offline
Menu

LATEST NEWS

14 வயது சிறுவன் தீ விபத்தில் உயிரிழப்பு – 11 முதல் 14 வயதுக்குள் 14 பிள்ளைகள் கைது
By Administrator
Published on 05/05/2025 08:00
News

இங்கிலாந்தின் கெயிட்ச்ஹெடில் ஒரு தொழிற்துறைக்கூடத்தில் ஏற்பட்ட தீயில் 14 வயது சிறுவன் லெய்டன் கார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 11 முதல் 14 வயதுக்குள் உள்ள 14 பிள்ளைகள் (இதில் 3 பேர் பெண்) கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகள் தொடக்க நிலையில் இருக்கின்றன என போலீசார் தெரிவித்துள்ளனர். லெய்டனின் உடல் கட்டிடத்திற்குள் இருந்து மீட்கப்பட்டது. அவரது குடும்பத்துக்கு போலீசார் ஆதரவு அளித்து வருகின்றனர். பொதுமக்கள் இணையத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுள்ளனர்.

Comments