ஷா ஆலமில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து சுமார் RM111,743 மதிப்புள்ள நகைகளை திருடிய சம்பவம் தொடர்பாக, புன்சாக் ஆலமில் உள்ள தம்பதியர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
25 மற்றும் 23 வயதுடைய இந்த தம்பதியர்கள் ோஜ்காரிகள் என்றும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட காவல்துறை தலைவர் முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இருவரும் மே 5 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். டிக்டாக்கில் 2 நிமிடம் 26 விநாடிகள் கொண்ட சிசிடிவி வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது, அதில் நகைக்கடையில் ஒரு வளையலும் மோதிரமும் திருடப்படும் காட்சி பதிவாகியுள்ளது.