Offline
டூரிஸ்ட் ஃபேமிலி 3 நாளில் ரூ.9 கோடி வசூல் – சசிகுமாருக்கு ஹாட்ரிக் ஹிட்!
By Administrator
Published on 05/05/2025 08:00
Entertainment

சசிகுமார் நடிப்பில் மே 1ல் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் விமர்சன, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கம், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம், 3 நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 9 கோடி வசூலித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது.

சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம், சசிகுமாரின் தொடர் வெற்றிகளை தொடர்ந்து ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Comments