பாபாகோமோ, பிரசங்கர், குவாங் ஃபேஸ்புக் கணக்கு நடத்துநருக்கு எதிராக டத்தோக் ஃபஹ்மியின் அவதூறு வழக்குகள் – அக்டோபர் 2ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்!
தகவல் அமைச்சர் டத்தோக் ஃபஹ்மி பத்சில் தாக்கிய அவதூறு வழக்குகள் தொடர்பாக, பாபாகோமோ (வான் முகமது அஸ்ரி), பிரசங்கர் அக்மத் துசுகி மற்றும் “N13 குவாங்” ஃபேஸ்புக் கணக்கு நடத்துநர் மொக்த் ஃபவ்ஸான் மட்ச்லான் ஆகிய மூவருக்கும் எதிராக விசாரணை அக்டோபர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெறும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவர்கள் மூவரும், ராவாங் மசூதியில் அரசியல் உரையாற்றியதாக ஃபஹ்மியை குற்றம்சாட்டியதாக கூறப்படுகின்றது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் அத்தாட்சியின்றி பொய்யானவை என்றும், இசுலாமிய விவகார சபை ஃபஹ்மி அரசியல் உரை நிகழ்த்தவில்லை என உறுதி செய்துள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் அவதூறு ஈடுசெலுத்தல் மற்றும் மீண்டும் அவ்வழிவகைச் செய்திகளை வெளியிட தடை கோரப்பட்டு உள்ளது.