லெபனானில் அமைதி பணி மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அமைதி படை (மல்பாட் 850-12) பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வருவதாக இராணுவத் தலைவர் ஜெனரல் தான்ஸ்ரீ முகம்மது ஹஃபிஸ் உட்டீன் தெரிவித்தார்.
தற்போதைய சிக்கலான சூழ்நிலையிலும் அவர்களின் பாதுகாப்பு நிலைமை நிலையாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
படையினர் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும், எதிர்பாராத தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு கட்டிடங்கள், போர் தாங்கும் குண்டு தளங்கள் போன்றவை முன்னிலையிலேயே அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மல்பாட் 850-12 படையினர் வரும் நவம்பரில் நிலை மாற்றமாக நாட்டிற்கு திரும்ப, புதிய குழுவான மல்பாட் 850-13 அனுப்பப்படும் என்றும், புதிய குழுவில் 850 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.