டோக்கியோ மெட்ரோவில் பரபரப்பான நேரத்தில் ஒருவர் மீது கத்தியுடன் தாக்கியதாக 43 வயதான யோஷிடாக்கா தோடா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் தப்பிக்க முயன்றபோதும், சந்தேகநபர் தொடர்ச்சியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மற்றொரு பயணியும் காயமடைந்தார். அறிமுகமில்லாத இருவருக்குள் நடந்த இந்த வன்முறை தாக்குதல், குற்றங்கள் குறைந்த ஜப்பானில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.