புத்திரஜாயாவில் நடைபெற்ற கிராம மற்றும் பிராந்திய வளர்ச்சித் துறையின் மாத சந்திப்பில், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நவீன உலகத்தில் போட்டியிடக்கூடிய திறன்கள் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கான புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தில், "Rural Gig Hubs" என்ற வேலை வாய்ப்பு மையங்கள், “தூதர் இளைஞர்கள்” (Duta Belia Desa) எனப்படும் பிரதிநிதிகள் நியமனம் மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையிலான இளைஞர் பரிமாற்றத் திட்டம் உள்ளிட்ட முன்முயற்சிகள் அடங்கும்.
அவர் மேலும் கூறியதாவது, இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மையமாக இருக்கும் என வலியுறுத்தினார். “தொடர்ந்து வளர்கிற உலக சவால்களை எதிர்கொள்ள கிராமப்புற இளைஞர்களைத் தயாரிக்க வேண்டியது அவசியம்,” என்றும், KKDWயின் அனைத்து உள்நிலை நிறுவனங்களும் ஒரே கூட்டு மேடையில் இணைந்து இந்தக் கனவை மெய்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“மலேசியாவின் கிராமப்புற இளைஞர்கள் உலகம் முழுவதும் தங்களை வெளிப்படுத்த வேண்டும். எல்லைகளை தாண்டி, தன்னம்பிக்கையுடன் உலக அரங்கில் போட்டியிட வேண்டும்,” என்றார் ஜாஹிட்.