கோலாலம்பூர் கோபுர ஊழியர்களை தொடர்புடைய, இன மற்றும் மத உணர்வுகளைத் தாக்கும் வகையில் TikTok-ல் வீடியோ ஒன்றை பதிவேற்றியதற்காக, முகமது ஷாபிக் அப்துல் ஹலீம் என்பவருக்கு RM10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை தொடர்பாக, தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) சட்டத்துறை ஒப்புதல் பெற்ற பின்னரே அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தது. இது தொடர்பான விசாரணை, 1998 ஆம் ஆண்டு தகவல் மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
MCMC, சமூக ஊடக பயனாளர்கள் ஒழுங்குமுறையுடன் மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, இன, மத அல்லது மன்னர் நிறுவங்களை புண்படுத்தும் உள்ளடக்கங்களை பகிர்வது கடுமையான நடவடிக்கைக்கு உட்படுமென எச்சரித்துள்ளது.