சென்னை: 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், 'தக் லைஃப்' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.