சிவகார்த்திகேயனின் சில செயல்கள் எரிச்சலூட்டுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வருகின்றன. குறிப்பாக ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்து வருகிறார். வழக்கமாக நல்ல படங்கள் வெளியாகும் போது ரஜினி, கமல் போன்றோர் பாராட்டுவது படத்திற்கு விளம்பரமாக அமையும். ஆனால் சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு விளம்பரம் தேவைப்படும் நிலையில், மற்ற படக்குழுவை அழைத்து பாராட்டுவதும், அழைக்காத இடங்களுக்கு சென்று வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை பாராட்டினார், ஆனால் சசிகுமார் பங்கேற்கவில்லை. தற்போது 'பென்ஸ்' பட பூஜையில் ராகவா லாரன்ஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு காரணம், இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் படம் வெளியாவது கடினம் என்றும், ஒரு வருடம் இடைவெளி விட்டால் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்ற பயமும்தான். பத்து வருடங்கள் கழித்து செய்ய வேண்டிய செயல்களை சிவகார்த்திகேயன் இப்போது செய்வதாகவும், அவரது மார்க்கெட்டிங் மேனேஜர் ரஜினி, கமல் போல் ஆகலாம் என்று ஆலோசனை கூறியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.