சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' மே 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி அளித்த பேட்டியில், பேய் படங்கள் குறித்து சந்தானம் நகைச்சுவையாகப் பேசினார். ராகவா லாரன்ஸ் உதவி தேவைப்படும் பேய் கதைகளையும், சுந்தர் சி எமோஷனலான பேய் கதைகளையும், தான் காமெடியான பேய் கதைகளையும் தேர்ந்தெடுப்பதாக அவர் கூறினார். 'தில்லுக்கு துட்டு' பாணியிலான கதைகளில் தான் நடிப்பதாகவும் சந்தானம் தெரிவித்தார். சமீபகாலமாக பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.