சமீபத்தில் வெளியான சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வரும்போது சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக இப்படம் கூறியுள்ளது. ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். தற்போது இப்படம் 43 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.படத்தின் வெற்றி விழாவில் பேசிய சசிகுமாரிடம், சம்பளத்தை உயர்த்துவீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அவர் சம்பளத்தை உயர்த்தப் போவதில்லை என்று பதிலளித்தார். பல வருடங்களுக்குப் பிறகு 'டூரிஸ்ட் ஃபேமிலி' வெற்றி பெற்றுள்ளதாகவும், இது அவரது சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த 'குட்டி புலி' மற்றும் 'சுந்தரபாண்டியன்' படங்களின் வசூலை முறியடித்துள்ளதாகவும் அவர் கூறினார். முதல் நாளிலேயே இப்படம் இரண்டரை கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், இந்த வெற்றி தனக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும் சசிகுமார் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.