இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தேவயானி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவரது கணவரை மோசமாக சந்தானம் கலாய்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்று பேசி இருப்பார்.
தற்போது, இதற்கு சந்தானம் பதில் அளித்துள்ளார். அதில், " அந்தப் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும்போதே, இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் தான் என்று தெரிவித்தோம்.
முதலில் நாங்கள் ஸ்க்ரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேயா என்று கேட்டுவிட்டுத்தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.