சத்தீஷ்கார் பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த கரேகுட்டா மலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். 11 நாட்கள் நடந்த மோதலில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களில் 16 பேர் பெண்கள். 40 ஆயுதங்கள், கண்ணிவெடிகள், 450 ஐஇடி வெடிகள், 12 ஆயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதத் தொழிற்சாலை அழிக்கப்பட்டது. ஒரு காலத்தில் சிவப்பு பயங்கரவாதம் இருந்த மலையில் இப்போது மூவர்ணக் கொடி பறக்கிறது என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.