Offline
உலக ஸ்குவாஷ் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய சிவசங்கரி
By Administrator
Published on 05/17/2025 09:00
Sports

அமெரிக்கா  அமெரிக்கா, சிக்காங்கோவில் நடைபெற்று வரும் உலக  ஸ்குவாஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் உபசரணை நாட்டின் அமான்டா ஷோபியைத் தோற்கடித்து, மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறினார்.

சிக்காங்கோ பல்கலைக்கழக கிளப்பில் நடைபெற்ற இவ்வாட்டத்தை 3-0,11-8, 14-12,11-6 என்ற புள்ளிகளில் சிவசங்கரி கைப்பற்றினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

காலிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனை ஒலிவியா வியெவருடன் சிவசங்கரி மோதவுள்ளார்.

Comments