திருமணத்துக்கும் பிறகு மகனுக்கு தாயாகிய நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் பங்கு பெற்றார். உடலை சீரமைத்து கடுமையான உழைப்புடன் நடித்திருந்தும், அவரது காட்சிகள் அனைத்தும் இந்தியன் 3-இல் தான் இடம்பெறும் என ஷங்கர் அறிவித்தார். இந்தியன் 2 எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், மூன்றாம் பாகம் வெளியாவதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில், காஜல் அகர்வால் எந்தவிதப் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போது, நிதிஷ் திவாரி இயக்கும் பிரம்மாண்ட ராமாயண படத்தில், ராவணனாக நடிக்கும் யாஷ்க்கு ஜோடியாக மண்டோதரி ரோலில் காஜல் நடிக்க இருப்பதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன.