சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் கோவிட்-19 நோய்த் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் இது எச்சரிக்கை மட்டத்தை விட குறைவாகவே உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் 1வது வாரத்திலிருந்து 19வது வாரம் வரை மொத்தம் 11,727 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜனவரியின் ஆரம்ப வாரங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவானது, ஆனால் 15வது வாரத்துக்குப் பிறகு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது. தற்போது வாரம் சராசரியாக 600 பேர்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
சுகாதார அமைச்சகம் இது எச்சரிக்கை அளவிற்கு கீழேதான் உள்ளதாகவும், தேவையான கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்துவந்தும் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் தயார் மற்றும் எதிர்வினை மையம் (CPRC) தொடர்ந்து ஆபத்து மதிப்பீடு செய்து வருகிறது.