ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடித் துருப்புச் சுரங்கத் திட்டம் இன்னும் பொருத்தமானதுதானாக , மாநில மக்களுக்கும் வளர்ச்சிக்கும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மாநில அரசு தெரிவித்தது.
மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து குழு தலைவர் கைரில் கீர் ஜோஹாரி கூறுகையில், இந்த திட்டம் முதல் பாலத்தில் காணப்படும் கனமான போக்குவரத்தைப் புதிதாகத் திட்டமிடப்படும் வழித்தடத்திற்கு மாற்றுவதால் நெரிசலைக் குறைக்கும் என தெரிவித்தார்.
திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது. இருப்பினும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், நடைமுறைப்படுத்தலுக்கு முன்னதாக நடந்துவரும் தகுதிச் சோதனை முடிவின் அடிப்படையில் திட்டத்தைத் தொடர வேண்டுமா என்ற முடிவை எடுக்க அரசு உரிமை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு முதலமைச்சர் சவ் கோன் யியாவ், தீவு மற்றும் செபெராங் பிறாய் இடையே உள்ள மூன்றாவது இணைப்புக்கான திட்ட பாதையில் மாற்றம் இருக்கும் எனப் பிப்ரவரியில் தெரிவித்தார்.
இந்த கடலடித் துருப்புச் சுரங்கம், ரூம்6.3 பில்லியன் மதிப்பிலான பினாங்கு மெகா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.