Offline
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
By Administrator
Published on 05/23/2025 09:00
Entertainment

நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியான நடிகராக இருக்கின்றார். அவர் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார், அதுடன் குபேரா படத்தில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஹிந்தி திரைப்படமான Tere Ishk Mein படத்தில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதோடு, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடிப்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது, ஒரு புதிய அறிவிப்பாக, விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த கலாம் பயோபிக் படத்தை பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவுள்ளார். படம் சார்ந்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Comments