'ஜெயம்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை சதா, பின்னர் 'அந்நியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன.பின்னர், ‘டார்ச் லைட்’ போன்ற சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்துப் பேசுபவராக மாறினார். அந்தப் படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்தார்.தற்போது 41 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்யவில்லை. “திருமணம் செய்தால் சுதந்திரம் குறைந்து விடும்” என்கிறார்.இப்போது, வனவிலங்குகளின் புகைப்படக் கலைஞராக (wildlife photographer) பணியாற்றி வருகிறார். தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் Instagram-இல் பகிர்ந்து வருகிறார்.