உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒரு நேர்காணலில் பேசும்போது தனது முன்னாள் மனைவி சாய்ரா பானுவிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பாயா என கேட்க வேண்டும், என கூறிய ரகுமான், தாங்கள் திருமணமாக இருந்தது முடிவடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.