தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தராததால், நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்தது. 2024-ல் இது பெரும் சர்ச்சையானது.
வடிவேலு, விஷால் போன்றோர் ரெட் கார்டு தடையிலிருந்து மீளப் போராடிய நிலையில், தனுஷ் எந்தச் சலசலப்புமின்றி தொடர்ந்து நடித்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "ராயன்", "கேப்டன் மில்லர்" போன்ற படங்கள் வெளியாகின. தற்போது "இட்லி கடை", "குபேரன்" போன்ற படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.
ரகசியம் அம்பலம்
இதன் பின்னணி இப்போது வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் தனுஷின் சமீபத்திய படங்களைத் தயாரித்து வருகிறார். ஆகாஷ் பாஸ்கரன், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதாலும், திமுகவின் அன்பில் பொய்யாமொழியின் உறவினர் என்பதாலும், தனுஷ் ரெட் கார்டு மற்றும் பெரிய பட்ஜெட் போன்ற சிக்கல்களை எளிதாகக் கடந்து வருகிறார்.