எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம், விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகை ரேவதியும் இணைந்துள்ளார். இவர் விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜனநாயகன்' அடுத்த ஆண்டு பொங்கலுக்கு, ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்றும், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.