வல்லாடோலிட்: ஸ்பானிஷ் கால்பந்து கிளப் ரியல் வல்லாடோலிட்டின் பெரும்பாண்மைப் பங்குகளை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஒரு வட அமெரிக்க முதலீட்டுக் குழுமத்திற்கு விற்றுள்ளார். 2018 இல் 51% பங்குகளை வாங்கிய ரொனால்டோவின் கீழ், கிளப் மூன்று முறை லா லிகாவிலிருந்து தரம் தாழ்த்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்களிடம் அவர், "ஏமாற்றுக்காரர்" என்றும் "பொறுப்பற்றவர்" என்றும் விமர்சனங்களை சந்தித்தார். ரொனால்டோவின் இந்த முடிவு, ஏழு வருடங்களுக்குப் பிறகு லா லிகாவில் அவரது பயணம் முடிவுக்கு வந்துள்ளது