நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதுடன், தீவிர கார் பந்தய வீரராகவும் விளங்குகிறார். 2001 முதல் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள அவர், தற்போது ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற தனது அணியை தொடங்கி, பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் பெறுகிறார்.
தற்போது, அவரது அதிகாரபூர்வ யூடியூப் சேனல் ‘Ajithkumar Racing’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கார் பந்தயங்கள், பயிற்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் பகிரப்படும். சேனல் துவங்கிய சில மணி நேரங்களில் 17,000 பேருக்கும் மேலானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.