மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். எம்புரான் படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து இவரது நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் ‘தொடரும்’. தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார்.இதில் பிரகாஷ் வர்மா, பினு பப்பு, மேத்யூ தாமஸ், பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சினையும் அதன் தீர்வுகளுமாக பேமிலி திரில்லர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரும் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 30-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.