Offline
Menu

LATEST NEWS

ஜூன் 14இல் நடைபெறவிருக்கும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பேச்சுவார்த்தையை மலேசியா ஆதரிக்கிறது: அன்வார்
By Administrator
Published on 06/08/2025 08:00
News

தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இரு நாடுகளும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சு வார்த்தைகளை மலேசியா ஆதரிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். 2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக, ஜூன் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தாய்லாந்து, கம்போடியா இடையேயான பேச்சுவார்த்தைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் மலேசியா தயாராக இருப்பதாக அன்வார் கூறினார்.

நான் (தாய்லாந்து – கம்போடியாவின்) இரு பிரதமர்களுடனும் பேசினேன். அவர்கள் நாங்கள் ஆதரிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதாவது தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த்தை என அவர் விவரித்தார். நான் பங்கேற்கவும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருக்கிறேன். இதுவரை, இரு அரசாங்கங்களும் இணக்கமான பேச்சுவார்த்தைகளைத் தொடரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று அவர் இன்று மஸ்ஜித் புத்ராவில் சுமார் 15,000 பேருடன் solat sunat Aidiladha நிகழ்த்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மே 28 அன்று, கம்போடியாவின் பிரியா விஹார் மாகாணத்தின் எல்லையான தாய்லாந்தின் உபோன் ரட்சதானி மாகாணத்தில் தாய், கம்போடிய துருப்புக்கள் ஒரு சிறிய மோதலில் ஈடுபட்டன. இந்த சம்பவத்தில் ஒரு கம்போடிய வீரர்  கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எல்லைப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்வதற்கான தனது நோக்கத்தை கம்போடியா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தாய்லாந்து, அனைத்தலக சட்டத்தின்படி, கம்போடியாவுடனான தற்போதைய ஒப்பந்தங்களின்படி, இந்தப் பிரச்சினையை அமைதியாகத் தீர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பதற்றத்தைத் தொடர்ந்து, ஜூன் 14 அன்று புனோம் பென்னில் நடைபெறவிருக்கும் கூட்டு எல்லை ஆணையம் மூலம் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க இரு அண்டை நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இரண்டு ஆசியான் அண்டை நாடுகளுக்கும் இடையே அமைதியான நீண்டகாலத் தீர்வை நோக்கி இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments