Offline
Menu

LATEST NEWS

ஆறு பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி
By Administrator
Published on 06/08/2025 08:00
News

ஷா ஆலம்:

நேற்று, போர்ட் கிள்ளான் தஞ்சோங் ஹராப்பான் பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாகவும், மூன்று முதல் 50 வயதுக்குட்பட்ட ஆறு பேர் இதில் பாதிக்கப்பட்டதாகவும், சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் (MMEA) இயக்குநர், கடல்சார் கேப்டன் அப்துல் முஹைமின் முகமட் சாலே தெரிவித்தார்.

இந்நிலையில் தம்பதியர் இருவர் காணாமல் போனதாகவும், அவர்களை தேடி, மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறை ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Comments